கொழும்பில் கொலை செய்யப் பட்ட கிருஷ்ணா தொடர்பில் பொலிஸ் வெளியிட்ட பகீர்த் தகவல்

கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­ன­ரும் நவோ­தய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வ­ரு­மான கிருஷ்­ண­பிள்ளை கிரு பா­னந்­த­னின் கொலை, போதைப்­பொ­ருள் வியா­பா­ரத்­து­ டன் தொடர்­பு­டை­யதா?

என்று சந்­தே­கம் எழுந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடக பேச்­சா­ளர் ருவான் குண­சே­கர தெரி­வித்­தார்.

24 மணி­நே­ரத்­துக்­குள் இரண்டு துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்­றில் புறக்­கோட்டை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட செட்­டி­யார் தெரு­வில் நேற்று முன்தினம் பழக்­க­டை­யொன்­றுக்­குள் இடம்­பெற்ற துப்­பாக்­கிச் சூட்­டில் கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­னர் வயது – 40) உயி­ரி­ழந்­தார். இவர் மீது கஞ்சா போதைப்­பொ­ருள் வியா­பா­ரம் தொடர்­பில் இரண்டு வழக்­கு­கள் காணப்­ப­டு­கின்­றன.

அவர் தற்­போது பிணை­யி­லி­ருந்த நேரத்­தி­லேயே துப்­பாக்­கிச் சூட்­டுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­துள்­ளார். இவ­ரது கொலை போதைப்­பொ­ருள் வியா­பா­ரத்தை மையப்­ப­டுத்­தியே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­க­லாம் என்று சந்­தே­கம் எழு­கின்­றது.

எவ்­வா­றெ­னி­னும் மேல்­மா­காண மூத்த பொலிஸ் மா அதி­ப­ரின் வழிக்­காட்­ட­லின் கீழ் குற்­றத்­த­டுப் புப் பிரி­வுப் பொலி­ஸா­ரா­லும், புறநகா் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யின் கீழான குழு­ வொன்­றும் இது தொடர்­பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர் என்­றார்.