பரிதாபமான நிலையில் கொழும்பு மக்கள்

கொழும்பில் இன்று அதிகாலையில் சில பகுதிகளில் பலத்த காற்று வீசியதில் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது.

இதற்கு நஷ்டைஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என மக்கள் வலுயுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

மற்றும் அந்த வகையில் கல்கிஸை மற்றும் தெஹிவளை பகுதிகளில் சேதமடைந்த வீடுகளுக்கே இவ்வாறு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபா வீதம் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.