இலங்கையில் புதியதாக சர்வதேச விமான நிலையம்

இலங்கையில் மிக விரைவில் புதியதாக சர்வதேச விமான நிலையம், சர்வதேச கிரிக்கெட் அரங்கம் வரும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அது குறித்த நிகழ்வில் ஒன்றில் கூறியுள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

அப்போது தான் இலங்கையில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் ஹிங்குரக்கொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்வுள்ளதாக கூறினார். இந்த திட்டம் திருகோணமலை அபிவிருத்திக்காக முன்மொழியப்பட்டுள்ள மூலோபாய திட்டத்தின் கீழ், சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் அரங்கமொன்றும் அமைக்கப்படவுள்ளது எனவும் கூறினார்.

இந்த திட்டம் திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை அணடிய பிரதேசங்களின் பாரிய அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.