இராணுவ வீரர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்மலானை - சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.