ஆடைத் தொழிற்சாலைக்குச் சென்ற பெண்களுக்கு நேர்ந்த கதி

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டையிழந்து வீதியோரம் நின்ற தென்னை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த பெண்கள் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து இன்று காலை கொழும்பு ஹபராதுவ- ஹெடிவத்தப் பகுதியில் நடந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஹபராதுவ- கலுகல பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.