யாழ்பாணம் விரையும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார

வடக்கில் வன்முறை தாக்குதல் அதிகமாக இருப்பதால் அதை நேரடியாக ஆராய்வதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்துவ பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் சற்றுமுன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்களுடன் சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டாரவும் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.