அமீத் வீரசிங்க சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தம்மை விடுவிக்குமாறு கோரி, இவர் நேற்று முதல் ​போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கண்டியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.