மட்டகளப்பில் சவுக்குமரம் காட்டில் திடீர் தீவிபத்து!

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குமர காட்டில் இனந்தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை தீ பரவியுள்ளதுடன் தீயை அனைப்பதற்கு மட்டக்களப்பு தீயனைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர், செங்கலடி பிரதேச சபையினர் மற்றும் பொலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் குறித்த தீயானது காணி அபகரிக்கும் நபர்களினால் திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.