இப்படியும் பாதிக்கப் படும் மாணவர்கள்

கிளிநொச்சி கல்மடு றங்கன் குடியிருப்பு மற்றும் நாவல் நகர்ப்பகுதிகளில்உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையினால் பெருமளவான மாணவர்கள் பாடசாலைகளுக்குச்செல்லாமலும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்டு காணப்படுவதாக பிரதேச மக்களும் கிராம மட்ட அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கல்மடு றங்கன் குடியிருப்பு நாவல் நகர் போன்ற கிராமங்களில் வாழ்கின்ற குடும்பங்களிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலைகளில் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட மாணவர்களாகவும் இடைவிலகிய மாணவர்களாகவும காணப்படுகின்றனர் என பல்வேறு தரப்புக்களாலும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற குறித்த கிராமமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் இது தொடர்பில் கேட்டபோது குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற குடும்பங்கள் அனைத்தும் வறுமையான குடும்பங்களாகவே காணப்படுகின்றன.

இங்கிருந்து செல்கின்ற பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால கூடுதலான மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளில் பயணிக்கின்றனர்.

பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற ஒரு சூழலும் காணப்படுவதனால் அவர்கள் மக்கள் நடமாட்டம்; அற்ற நீண்ட பாதைகள் ஊடாக தனிமையில் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது.

இவ்வாறு போக்குவரத்து உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையே பிரதானமான காரணமாக காணப்படுகின்றபோதும் குடும்ப வறுமை மற்றும் குடும்பங்கள் இடையிலான பிணக்குகள் என்பனவும் இந்த மாணவர்களின் பாதிப்பிற்கு காரணமாக அமைகின்றது என தெரிவித்தனர்.