விஜயகலாவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை பறிக்க வேண்டும்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என, அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என, விஜயகலா மகேஸ்வன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.