ரஞ்சன் தொலை பேசி உரையாடலை ஊடங்களுக்கு தெரியப்படுத்தியது தவறு:விஜயகலா மகேஸ்வரன் ஆவேசம்

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சிறுவர் பெண்கள் விவாகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தொலை பேசி உரையாடலை ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்தயதனை பார்த்து விஜயகலா மகேஸ்வரன் கோபம் அடைத்தார்.

யாழ்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் பிரிதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எமது குடும்ப நண்பர் அந்த வகையிலையே அன்றைய தினம் விஜயகலா மகேஸ்வரன் அவருடன் தொலைபேசியில் உரையாடி இருந்தார். அந்த உரையாடலை ஊடகவியலாளர சந்திப்பில் பகிரங்கமாக விட்டுள்ளார் என அவர் கூறினார்.

ஒரு நடிகரை பரிதி அமைச்சராக கொண்டு வந்தது கட்சி செய்த பிழை அதனால் தான் அவருக்கு ஊடக அறம் இல்லாது விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் செயற்பட்டு உள்ளார். அந்த செயற்பாட்டுக்காக தற்போது அவர் மனம் வருத்தி உள்ளார் என அறிந்து கொண்டோம்.