கிளிநொச்சியில் குழந்தை பிரசவித்த பெண்கள் அச்சத்தில்

கிளி­நொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குழந்தை பிர­ச­வித் த­வர்­க­ளின் விவ­ரத்தை பங்­க­ர­வா­தக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ள­னர்.இதனால் பெண்கள் சற்று அச்சத்தில் இருக்கின்றனர்.

மருத்­து­வ­ம­னை­யி­லும், வீடு­க­ளி­லும் குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. அதற்­கான கார­ணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்­பில் மாகாண சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் எஸ்.திரு­வா­க­ர­னைத் தொடர்­பு­கொண்டு கேட்­டோம்.

குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பயங்­க­ர­வாத குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ளமை தொடர்­பில் அமைச்­சுக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது.

அதை வழங்­கு­வ­தற்கு எமக்கு அனு­ம­தி­யில்லை. கொழும்பு சுகா­தார அமைச்­சுக்கு இந்த விட­யம் தொடர்­பில் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம். அவர்­கள் அனு­ம­தித்­தால் தக­வல் வழங்­கு­வோம்’ என்று அவர் தெரி­வித்­தார்.