உலகக் கோப்பையில் தங்க கிளவ் விருது பெல்ஜியத்தின் கோர்டியோஸ் வென்றார்

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நிறைவடைந்தன. இந்த உலகக் கோப்பையின் சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கிளவ் விருதை 3வது இடத்தைப் பிடித்த பெல்ஜியத்தின் திபாட் கோர்டியோஸ் பெற்றார்.

ஃபிபா உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதைத் தவிர, சிறந்த முறையில் செயல்படும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அதன்படி சிறந்த கோல் கீப்பருக்கு தங்க கிளவ் விருது வழங்கப்படுகிறது. இந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்த இங்கிலாந்தின் ஹார் கேன், தங்க பந்து விருதை வென்றார்.

ஃபிபாவின் தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் விருதுக்குரியவரை தேர்ந்தெடுப்பர். 2006 வரை இந்த விருது யாஷின் விருது என்று அழைக்கப்படது. சோவியத் யூனியனின் முன்னாள் கோல்கீப்பரி லீவ் யாஷின் நினைவாக விருது வழங்கப்பட்டு வந்தது.

இந்த விருதைப் பெற்றோர்:

2014 : மானுவல் நியூயர் (ஜெர்மனி)

2010 : இகெர் காசிலாஸ் (ஸ்பெயின்)

2006 : கியான்லூகி பபான் (இத்தாலி)

2002 : ஆலிவர் கான் (ஜெர்மனி)

1998 : பேபியன் பார்தெஸ் (பிரான்ஸ்)

1994 : மைக்கேல் புரூட்ஹோம் (பெல்ஜியம்)