உலகக்கோப்பையின் இறுதியில் பார்ப்பவர்களை கண்ணீர் சிந்த வைத்த சம்பவம்

பிரான்ஸ் அணி வீரரான பால்போபா உலகக்கோப்பை வென்ற பின் தன்னுடைய அம்மாவிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழகு பார்த்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பின் மீண்டும் பிரான்ஸ் அணி கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளதால், அந்தணி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரரான Paul Pogba தன்னுடைய அணிக்காக மூன்றாவது கோல் அடித்து பிரான்ஸ் நாட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

இதையடுத்து உலகக்கோப்பை வாங்கியவுடன் அவர் உடனடியாக தன் அம்மா அருகில் சென்று, அவரை கட்டி அணைத்தார்.

அதன் பின் உலகக்கோப்பையை அவரிடம் கொடுத்து அழுகு பார்த்து ஆனந்த கண்ணீர்விட்டார். இதே போன்று பிரான்ஸ் அணி வீரர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் மனைவிகளிடம் உலகக்கோப்பையை கொடுத்து அழுகு பார்த்தனர்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி

01.உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வெற்றியில் வெடிக்கும் புதிய சர்ச்சை

02.இரண்டு முறை உலகக் கோப்பையை பிரான்ஸ் வெல்வதற்கு காரணமான முக்கிய மனிதர்! புதிய சாதனை படைத்தார்

03.உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் போராடி வென்றது பிரான்ஸ்

04.குரோசிய அணி தோற்றாலும் தமிழினத்திற்கு விட்டுச் சென்ற முக்கிய செய்தி

05. உலகக் கோப்பையில் தங்க கிளவ் விருது பெல்ஜியத்தின் கோர்டியோஸ் வென்றார்

06.மான்கராத்தே ஸ்டைலில் கெத்து காட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி! வைரலாகும் புகைப்படம் உள்ளே