மான்கராத்தே ஸ்டைலில் கெத்து காட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி! வைரலாகும் புகைப்படம் உள்ளே

இவ்வளவு உற்சாகமான கொண்டாட்டத்தை நான் பார்த்ததே இல்லை.ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களும் வீதிகளில் மகிழ்ச்சி பொங்க துள்ளிக் குதிக்கிறார்கள்.

வீதிகள் எங்கள் ‘ஹோர்ன்’ அடித்தபடி கார்கள், ஹெல்மெட் இல்லாத தலைகளுடன் மோட்டார் சாரதிகள்,

ஒரே மோட்டார் சைக்கிளில் நான்கு பேர்கள் எங்கும் பிரெஞ்சுக் கொடிகள், வர்ணிக்கவே முடியாத அளவுக்கு கொண்டாட்ட மழையில் மக்கள்

அங்கே பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனும் கட்டுப்பாட்டை இழந்து உற்சாக மிகுதியில் பிரெஞ்சு அணிவீரர்களுடன் கொண்டாடுவதாக தகவல். ‘நாம் வென்றுவிட்டோம்’ என மக்ரோன் கத்த, ‘யெஸ் சேர்’ என்று பொக்பா ஆங்கிலத்தில் பதில் சொன்னார் என்று, இங்கே ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

அதுசரிதான் உற்சாக மிகுதியில் நாம் என்ன லாங்குவேஜ் பேசுகிறோம் என்று எமக்கே புரிவதில்லை.முன்னதாக வெற்றி அறிவிக்கப்பட்ட போது மகிழ்ச்சியில் மக்ரோன் வெளிப்படுத்திய ‘மான் கராத்தே’ போஸ் இப்போது ட்ரெண்டிங் ஆகிவருகிறது.