மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் குட்டி பிரான்ஸ்! எங்கு தெரியுமா?

உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் நாடு வெற்றி பெற்றதை தொடர்ந்து குட்டி பிரான்ஸ் என்றழைக்கப்படும் புதுச்சேரியில் வெற்றி கொண்டாட்டங்கள் களைக்கட்டியது.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் 4-2 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி பெரிய வெற்றி பெற்றுள்ளது. மக்கள் புத்தாண்டை கொண்டாடுவது போல தங்களது இன்னொரு வீட்டின் வெற்றியை கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.

பிரான்ஸ் வெற்றி பெற்றதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதலமைச்சர் நாராயணசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றிருந்தாலும், புதுச்சேரியில் தற்போதுவரை அதிகளவு பிரான்ஸ் நாட்டினர் வசித்து வருகின்றனர். புதுச்சேரியில் இன்றளவும் அதிகமாக பிரெஞ்சு கலாச்சாரத்தை பின்பற்றி வருவதால் புதுச்சேரியை குட்டி பிரான்ஸ் என்றே அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டினர் அதிகளவு வசித்து வருவதால் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் கடற்கரை சாலையில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா இடையிலான உலகக்கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் பெரியத்திரையில் ஒளிபரப்பட்டது. பிரான்ஸ் மக்கள் மட்டுமில்லாமல் தமிழர்களும் இந்த போட்டியை கூட்டமாக கண்டுகளித்தனர்.

இறுதியாக 4-2 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து புதுச்சேரி கடற்கரை சாலையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் எங்கு பார்த்தாலும் வெற்றி கொண்டாட்டங்களாக காணப்பட்டது.

இந்த வெற்றி குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதுச்சேரியும் - பிரான்ஸ்சும் வெவ்வேறல்ல. இது புதுச்சேரிக்கு கிடைத்த வெற்றி என்றார். இதேபோல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தனது வாட்ஸ்அப் பக்கத்தில் பிரான்ஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.