இலங்கை மக்களுக்கு பதிய அதிர்ச்சி!புதிய மோட்டார் வாகன சட்டம்

நேற்று இருந்து இந்த புதிய அபராத விதிப்பு சட்டம் மோட்டார் வாகன சட்டம் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு, மேலும் 14 விதி மீறல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட, 2017 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க திருத்தத்திற்கு அமைய வெளியிடப்பட்டுள்ள, 2018 ஜனவரி 15 ஆம் திகதி 2054/09 எனும் அதி விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான புதிய உடனடி அபராத விதிப்பு தொடர்பிலான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பழைய உடனடி அபராத விதிப்பு 23 விதி மீறல்கள் தொடர்பில், வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், புதிய அபராத விதிப்பு ஆனது, 33 போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் உரிய அபராத சீட்டை வழங்குவதற்கு பணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் அற்றவரை சேவைக்கு அமர்த்துதல், ஆகிய மூன்று விதி மீறல்கள் புதிய திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளதோடு, அவை நீதிமன்றில் வழக்குத் தொடருதல் அடிப்படையான குற்றத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அது தவிர, ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில், வாகன இலக்கத் தகடு மற்றும் வாகன இலக்கத் தகட்டின் வடிவம் ஆகிய இரு விதி மீறல்களும், ஒன்றாக்கப்பட்டு வாகன இலக்கத் தகடு எனும் ரூபா 1,000 உடனடி அபராத விதிப்பு விதிக்கப்படும் புதிய விதி மீறலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்கள் ( 3 நீக்கம், 2 விதி மீறல் ஒன்றாக்கப்பட்டுள்ளது ) 19 ஆவதோடு, மேலும் 14 விதி மீறல்கள் அவற்றுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட 14 விதி மீறல்களும் அதற்கான உடனடி அபராதங்களும் பின் வருமாறு :

அனுமதிப்பத்திரமின்றி அவசரச் சேவை அல்லது பொதுச் சேவை வாகனங்களைச் செலுத்துதல் - ரூ. 1,000

அனுமதிப்பத்திரமின்றி விசேட செயற்பாட்டு வாகனங்களைச் செலுத்துதல் - ரூ. 1,000

அனுமதிப்பத்திரமின்றி இரசாயனப் பொருட்கள் மற்றும் தாக்குதிறன் மிக்க மூலப்பொருட்கள் கொண்ட வாகனங்களைச் செலுத்துதல் - ரூ. 1,000

500 இற்குள் உள்ளடங்கும் வாகனத்தைச் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் கொண்ருக்காமை - ரூ. 1,000

சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு செல்லாமை - ரூ. 1,000

ஆலோசக அனுமதிப்பத்திரம் இன்மை - ரூ. 2,000

புகை உள்ளிட்ட போன்றவற்றை, அதிகமாக வெளிப்படுத்துவது - ரூ. 1,000

ஆசனப் பட்டி அணியாமை - ரூ. 1,000

வாகனத்திலிருந்து அதிக சத்தம் வெளிப்படுத்தல் - ரூ. 1,000

வீதி சமிக்ஞையைப் பின்பற்றாமை - ரூ. 1,000

பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லல் - ரூ. 500

லொறிகளில் அல்லது முச்சக்கர, மோட்டார், வேன்களில், கொள்ளக்கூடிய

அதிகூடிய பாரத்திலும் பார்க்க அதிக பொருட்களை ஏற்றிச் செல்லல் - ரூ. 500

மோட்டார் வாகனம் தொடர்பான உத்தரவை மீறல் - ரூ. 1,000 (கண்ணாடியை மறைத்தல் கையடக்க தொலைபேசி பாவனை உள்ளிட்டவை)

உமிழ்வுச் சான்றிதழ் (புகை பரிசோதனை) உள்ளிட்ட சான்றிதழ்களை உடன் கொண்டு செல்லாமை - ரூ. 500

அத்துடன், ஏற்கனவே உள்ள அபராத விதிப்பிற்கு அமைய, ஆகக் குறைந்த அபராதத் தொகை ரூபா. 20 ஆகவும், அதி கூடிய அபராதத் தொகை ரூபா 5,000 ஆகவும் காணப்பட்டது.

இன்று (15) முதல் அமுலாகும் உடனடி அபராத விதிப்பில், மிகக் குறைந்த அபராதத் தொகை ரூபா 500 ஆகவும், அதி கூடிய அபராதத் தொகையான ரூபா 3,000 அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்துவது தொடர்பிலான விதி மீறல் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த அபராதத் தொகையைச் செலுத்த, அபராத சீட்டு வழங்கப்பட்ட தினத்திலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்பதோடு, அதற்கு மேலதிகமாக வழங்கப்படும் மேலதிக 14 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்தப்படும்போது, குறித்த அபராதத் தொகையை இரட்டிப்பாகச் செலுத்த வேண்டும் எனவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அத்துடன், குறித்த அபராதத் தொகையை, நாடு முழுவதிலுமுள்ள ஏதாவதொரு அஞ்சல் அலுவலகங்களிலோ அல்லது பிரதேச செயலகங்களிலோ செலுத்தலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.