தனக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி வடக்கு மாகாண சபையைச் சேர்ந்த பெண் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கியைத் தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்றுள்ள உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையில் பெண் அமைச்சராக அனந்தி சசிதரன் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.