இலங்கையில் பல்கலை மாணவருக்கு ஏற்பட்ட பரிதாபம்! இளைஞர்களே அவதானமாக இருங்கள்

அரநாயக்க - அசுபினி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போயுள்ள களனி பல்கலைக்கழக மாணவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14 ஆம் திகதி குறித்த இளைஞர் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரநாயக்க தாழ்வான பிரதேசத்தில் வசிக்கும் தம்பிக்க சம்பத் குறுவிட்ட என்ற மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடற் படையினர் மற்றும் பிரதேசத்தில் வசிக்கும் சிலர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த நீர்வீழ்ச்சியில் இருந்து வீழ்ந்த பல்கலைக்கழக மாணவர், நீர்வீழ்ச்சியின் தாழ் நில பகுதியில் காணப்படுகின்ற கற்குகைக்குள் நீரினால் இழுத்து செல்லப்பட்டிருக்கலாம் என காடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கற்குகை பகுதிக்குள் சிக்குண்டவர்கள் இதுவரை உயிருடன் மீட்க்கப்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.