கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருவர் கைது

சட்ட விரோதமான முறையில் சுமார் மூன்று கிலோ நிறையுடைய 29 தங்க பிஸ்கட்களை இலங்கைக்கு எடுத்து வந்த இருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று காலை டுபாய் நாட்டிலிருந்து இருவரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.