நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு முயற்சிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளை இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.