கதிர்காமத்தில் குழப்பமா? தமிழர்கள் என்ன உளவு பார்க்கவருகிறீர்களா?

வரலாற்றுப்பிரசித்திபெற்ற கதிர்காமக்ந்தனின் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கொடியேற்றும் நிகழ்விற்கு வெளியில் ஓரு குழுவினர் அதிருப்தி வெளியிட்டு கூச்சலிட்டதைக்காணமுடிந்தது.

கொடியேற்றுவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்று கொடியேறும் வேளையில் பள்ளிவாசலுக்கு வெளியில் நின்ற ஒரு குழுவினர் அதிருப்தியான கருத்துக்களை வெளியிட்டு உரத்துக்கத்தினர்.

பாரம்பரியம் மரபு மறுக்கப்படுகின்றது. தமிழர்களின் ஆலயத்தில் தமிழர்க்கே புறக்கணிப்பா? பாதயாத்திரையில் வேறினத்தவர்க்கு என்ன வேலை? நாம் உங்கள் யாத்திரைகளில் வருகின்றோமா? என்ன உளவு பார்க்கவருகிறீர்களா?இனி கொடியேற்றத்திற்கு வருவதில்லை என்ற கோசங்களை கேட்கமுடிந்தது.

கூடிநின்று பகிரங்கமாக தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர். பலர் கொடியேற்றப்பக்கமே போகாமல் அவரவர் இடத்தில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.