வவுனியாவில் மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்

குடும்பத் தகராற்றில், மீன் வெட்டும் கத்தியால் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதில் படுகாயமடைந்த குடும்பப்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் நடந்துள்ளது.

படுகாயமடைந்த பெண் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.