மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு பிணை

குருணாகல் பொலிஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆறு மாணவிகளை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே தலா ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு குருணாகல் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஆறு பேர் பொலிஸ் நிலையத்தினுள் வைத்து மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் குருணாகல் பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெற்றுள்ளது.

முகப்புத்தக்கத்தில் ஆபாசமான புகைப்படகள் மற்றும் ஆபாசமான வார்த்தைகளை பதிவேற்றுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கிணங்கவே இவர்கள் விசாரணைக்காக குருணாகல் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.