மட்டக்குளியில் ஹெரோயினுடன் பெண் கைது

மட்டக்குளியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரை மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இந்தப் பகுதியில் இன்று மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சிறப்பு சுற்றிவளைப்பின் போதே அவர் கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரிடமிருந்து 10.200 மில்லிகிராம் ஹெரோயினை மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் 46 வயதுடைய களனி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவருகிறது.

இவரை மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.