மாணிக்ககங்கையில் உயிருடன் பிடிக்கப்பட்ட முதலை

கதிர்காமம் மாணிக்ககங்கையில் யானைகள் நீராடும் பகுதியில் பெரிய முதலை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் இன்று காலை பிடித்துள்ளனர்

கதிர்காமம் பருவகாலம் காரணமாக மாணிக்ககங்கையில் நீராடும் மக்கள் மிக்க அவதானமாக நீராடுமாறு வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட முதலை ஆறு அடி நீளம் கொண்டது என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.