இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள புதுரக வாகனம்! ஆச்சிரியத்துடன் காணும் மக்கள்..

சூரிய மின்சக்தியில் இயங்கும் குளிரூட்டி வசதியுள்ள நவீன முச்சக்கர வண்டிகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சிறு வியாபார முயற்சியாளர்களின் நன்மை கருதி இந்த முச்சக்கர வண்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக Demak நிறுவனம் கூறியுள்ளது.

Eco3 என்ற இந்த முச்சக்கர வண்டியில் சூரிய மின்சக்தியில் இயங்கும் குளிரூட்டி வசதிகள் உள்ளன. பால், மீன் போன்வற்றின் விற்பனையில் ஈடுபடுபவர்களிற்கு இது பலனளிக்கும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அமைச்சர் திலிப் வெதஆராய்ச்சி இந்த முச்சக்கரவண்டி அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.