மட்டகளப்பு வைத்தியசாலையில் நான்கு பிள்ளைகளின் தாய்க்கு இப்படி ஒரு கொடூரமா?

களுதாவளையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரும் பெரியகல்லாறு மெதடிஸ் மிசன் பெண்கள் பாடசாலை ஆசிரியையுமான உதயலெட்சுமி கணேசன் (53)காது கேட்டல் குறைவு எனும் காரணத்திற்காக வைத்தியசாலயில்பரிசோதித்ததில் காதின் உட்பகுதியில் மென்சவ் வளர்ந்துள்ளது.

அதனை அகற்ற சிறு சத்திரசிகிச்சை செய்தால் சரியாகிவிடும் எனும் ஆலோசனைக்கு அமைய ஆசிரியை வைத்திய நிபுணரின் கண்கானிப்பிற்குரிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மருத்துவ விடுதியான 2ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை நடைபெற்று சத்திரசிகிச்சை கூடத்தை விட்டு பகல் 12 மணிக்கு வெளியேறி மீண்டும் அதே விடுதியில் சேர்த்து அங்கு பார்வையிட சென்ற ஆசிரியையின் மகளிடம் விடுதியிலுள்ளவர்கள் கூறியுள்ளார்கள் மயக்கமருந்து கொடுத்துள்ளதால் கண்முழிக்க மாலை 4மணியாகும் என கூறியதையடுத்து மகள் அம்மா எப்பொழுது கண்விழித்து பார்ப்பார் என்று ஏக்கத்துடன் காத்துகொண்டிருந்தார்.

தாயிடம் சிறிய அசைவோ சுவாசமோ நீண்ட நேரமாக இல்லாததை அறிந்து விடுதியிலுள்ள தாதிய உத்தியோகத்தருக்கு அறிவித்து வைத்திய விடுதியில் எந்த ஒரு வைத்தியரோ, வைத்தியநிபுணரோ இருக்கவில்லை எல்லோரும் தமது தனியார் வைத்தியசாலையில் உழைக்க சென்றுவிட்டார்கள் போல அத்தோடு அவ்விடுதியில் முதலுதவி சிகிச்சை கூட தயார் நிலையில் இல்லை ஒட்சிசன் கொடுக்க ஒட்சிசன் சிலிண்டர் கூட முன்னேற்பாடாக இல்லை.

சத்திரசிகிச்சை செய்து வந்த எனது உறவினராக இவ் ஆசிரியை கொஞ்சம் கூட நோயாளியை அவதானிக்க கூடிய நாடித்துடிப்பு, குருதியமுக்கம்,சுவாச வீதம் பரிசோதிக்காமல் எல்லோரும் அதாவது வைத்தியநிபுணர் Dr.ஜீவதாஸ் உட்பட மொத்த உத்தியோகத்தரும் படுகொலை செய்துவிட்டார்கள்.

இவ்மரணத்திற்கான காரணத்தை நாம் வைத்திய நிபுணரிடம் வினாவினால் தடுமாற்றமான பதிலாக மாரடைப்பு என்கின்றார் சிலர் மயக்க மருந்து அதிகம் கொடுத்ததாக இன்னுமொரு காரணம் இப்படி அநியாயமாக இவர்களின் கவனயீனத்தால் கல்வியறிவு கூடிய குடும்பமான எமது உறவினரை ஏமாற்ற முடிந்த இவர்களால் சாதரணமான கிராம மக்களை எவ்வளவு சுலபமாக ஏமாற்றுவார்கள் என்பதை பொதுமக்களாகிய நாம் இப்படுகொலையிருந்து பட்டறிவு பெற முடியும்

இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதால் போலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது..தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொருத்தவரை இப்பதான் வெளியாகிய டொக்டர் தொடங்கி நிபுணர் வரை எல்லோரும் தனியார் வைத்தியசாலையான பைனியர், ஜீவி, வாழைச்சேனை, ஏறாவூர், களுவாஞ்சிக்குடி,கல்முனை, காத்தான்குடி,அக்கரைப்பற்று என ஒவ்வொரு தனியார் கிளினிக் நிலையத்தில் கிடப்பதால் அரச வைத்தியசாலையான மட்டக்களப்பு வைத்தியசாலை விடுதிகளில் கவனிக்க வைத்தியரின்றி அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளி உயிரை அழிக்க துணை போகுன்றார்கள்.