இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து

கொழும்பு தொடக்கம் கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நொதகம கங்கையில் வீழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்து 4 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அம்பலன்தொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சாரதிக்கு பேருந்தினை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ள நிலையில் கங்கையில் வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கதிர்காமம் பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.