யாழில் வாள்வெட்டு குழுவை கட்டுபடுத்த காவற்துறையினர் எடுத்துள்ள திடீர் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக மக்களின் உதவியை நாடி வாகணப் பேரணியில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரில் தற்பொது இடம்பெறும் இந்தப் பேரணியில் வடமாகாணத்தின் உயர் காவற்துறை அதிகாரிகள், மற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் இணைந்துள்ளனர்.

இதன்போது மக்களுக்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்த வண்ணம் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது