வவுனியாவில் வீதியில் நடந்து சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வவுனியா ஹோரவப்போத்தானை வீதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக இன்று பகல் 12.00 மணியளவில் வீதியில் நடந்து சென்றவர் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்தார்.

இந்நிலையில் அங்கு நின்ற பொதுமக்களின் உதவியுடன் குறித்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியினை சேர்ந்த 56 வயதுடைய சிவா என்ற நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தற்போது முழுமையான சிகிச்சை வழங்கப்பட்டு உடல் நலம் தேறியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.