ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது

சிங்கபூர் - இலங்கை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படை அற்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகமான ஸ்ரீகோத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிங்கபூரின் குப்பைகளை இலங்கையில் கொட்டுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இது முற்றிலும் தவறானது.

எவ்வாறு அவர்கள் இப்படி பொய் கூறி வருகின்றார்கள் என்று விளங்கவில்லை என்றும் ஹர்ஷண ராஜகருணா குறிப்பிட்டார்.