யானை தாக்கி உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் வயல் வெளியில் யானைத் தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று (29) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வக்கியல்ல 39 கொலனியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பிராசா குணராசா என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வழமை போல மாடு மேய்பதற்காக சம்பவதினமான நேற்று அதிகாலை 5 மணிக்கு மாட்டுபட்டிக்கு சென்றுள்ள நிலையில் அவர் காலை 8 மணிக்கும் மாட்டுப்பட்டியடிக்கு வராததை அடுத்து மாட்டுப்பட்டி உரிமையாளர் அவரின் வீட்டிற்கு தொலைபேசியில் அவர் தொடர்பாக கேட்டபோது, அவர் வழமை போல 5 மணிக்கு மாட்டுப்பட்டிக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்

இதனை அடுத்து அவரை உறவினர்கள் தேடிய போது வயல்வெளியில் யானைத் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மாலை 3 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டு பிரோத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.