மன்னார் நீதவான் கொழும்பிற்கு மாற்றம்

மன்னார் மாவட்ட நீதவானாக கடமையாற்றிய ரீ.ஜே.பிரபாகரன், உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) அவர் கொழும்பில் தனது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென அறிவவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட நீதவனாக ரீ.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு மூன்று மாதங்களில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பல்வேறு வழக்கு விசாரணைகள் முடிவுறுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனால், குறித்த நீதவானுக்கு எதிராக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில் வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றம் தொடர்பில், பல்வேறு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.