பாதுகாப்பு மாநாடு இன்று

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று ஆரம்பமாகின்றது.

35 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் முப்படையின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் 200 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.

உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு என்பது இந்த வருட தொனிப்பொருளாக உள்ளது.

இந்த மாநாடு கொழும்பில் 7 ஆவது தடவையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.