குழுவின் அறிக்கையில் குறைபாடுகள்

மேல் மாகாண சபைக்காக ஒவ்வொன்றும் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான கதிரைகள் கொள்வனவு செய்யப்பட தயாரான விடயம் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை தொடர்பில் மேலும் ஆராயப்படுவதாகவும் அவர் எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை நேற்றைய தினம் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

மாகாண சபையின் புதிய கட்டத்திற்காக பெல்ஜியத்தில் இருந்து 125 கதிரைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அண்மையில், ஆளுநருக்கு ஜே.வி.பியின் மாகாண சபை உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணாராச்சியினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த தீர்மானம் ரத்துச் செய்யப்பட்டு, ஆளுநரினால் அது தொடர்பில் ஆராய 5 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொன்றும் 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுதியான குறித்த கதிரைகளின் உற்பத்தி செலவு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக காணப்படும் நிலையில் ஒரு கதிரைக்கான ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபா வரி அறிவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.