ஸ்ரீ ல.சு.கட்சியிலுள்ள 23 பேரும் ஜோக்கர்கள் – சுசில் பிரேம்ஜயந்த

எல்லைநிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 பேரினதும் நடவடிக்கை வேடிக்கையானது என அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேர் கொண்ட குழுவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

தமது கட்சித் தலைவரினால் முன்மொழியப்பட்ட பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதாயின் அவர்களின் நடவடிக்கையை என்னவென்று கூறுவது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 23 பேரும் கார்ட் கூட்டத்தில் உள்ள ஜோக்கர்கள் போன்றே உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்