எந்த சவால்களிலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் நோக்கில் நல்லாட்சி

எவ்வித சவால்கள் வந்தாலும் நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தி செய்யும் மூலநோக்கத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மொனராகலையில் நேற்றைய தினம் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து பிரதமர் உரையாற்றினார்.

2015ம் ஆண்டில் மாற்றத்திற்காக வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் பாடுபடுவதாக அங்கு சுட்டிக்காட்டிய பிரதமர், இது என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் தெளிவாவதாகவும் குறிப்பிட்டார்.

தெளிவாக உணரக்கூடிய மாற்றத்தை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்வதற்கு என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு ஆற்றல் கிடைத்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்காட்சியின் சகல காட்சிக் கூடங்களுக்கும் விஜயம் செய்த பிரதமர் பொதுமக்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.