குழுவின் அறிக்கை வந்து 3 மாதத்துக்குள் தேர்தல்- அமைச்சர் நிமல்

எல்லை நிர்ணய அறிக்கையின் குறைபாடுகளை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அறிக்கை ஒன்றை இரண்டு மாத காலத்திற்குள் வழங்க முடிந்தால், அது சம்பந்தமாக ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வௌியிடும் எனவும், இதனையடுத்து வரும் மூன்று மாத காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீ ல.சு.கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த அறிக்கையை தோல்வியடையச் செய்தது நாம் மாத்திரம் அல்ல, கூட்டு எதிர்க் கட்சியினரும் தான். நாமும் அவர்களது பக்கத்துக்கே வாக்களித்தோம். இதில் குறைகள் இருப்பதனாலேயே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தோம். யாருக்கும் கட்டுப்பட்டு அல்லவெனவும் அமைச்சரும் ஸ்ரீ ல.சு.க.யின் சிரேஷ்ட உப தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.