ஞானசார தேரருக்கு இழுத்தடிப்பா? கல் எறிந்த ரிஷாட் வெளியே- ராஜித பதில்

ஞானசார தேரருக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பில் தேரரது சிறைத் தண்டனைக் காலம் சிறிதளவாவது கழிந்த பின்னரேயே தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமாகிய ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதில் அரசாங்கம் தாமதம் காட்டுகின்றது. இருப்பினும், நீதிமன்றத்துக்கு கல் எறிந்த அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீனுக்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதற்கு,

அதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனை நீதிமன்றம் தீர்ப்புச் செய்யும். வழக்குத் தீர்ப்பு தாமதமாவதற்கு அரசாங்கம் பொறுப்பு அல்லவெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.