குழந்தைக்கு எமனான தாய் பால்? யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணத்தில் 11 மாதங்களே ஆன குழந்தை ஒன்று நோய் நிலையால் உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் - நாவற்குழி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாய் பால் தொண்டையில் சிக்குண்டதாக கூறி நேற்று முன்தினம் அந்த குழந்தை, பெற்றோரால் யாழ்ப்பாணம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நேற்று காலை அந்த குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மருத்துவமனை சட்ட வைத்தியரால் மரணம் தொடர்பான விசாரணை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்