மாணவர்களுக்கான புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிக்கத் தீர்மானம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசிலை இரு மடங்காக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தற்போது 15,000 ரூபா வழங்கப்படுவதுடன், அதனை 30,000 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தத் தடவை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெறும் மாணவர்களுக்கு புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.