ஐரோப்பா நாடு ஒன்றில் இளம் பெண்ணுக்கு இலங்கையர் செய்த காரியம்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலி, Milan, Navigli பகுதியில் நேற்று பெண்ஒருவர் துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் 40 வயதான இலங்கையர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Congo நாட்டு பெண் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி வந்த பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.