ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

பெலியகொட மற்றும் வெலிகட பிரதேசத்தில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெலியகொட - அனுவத்த பிரதேசத்தில் நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 15 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை வெலிகட - மாலிகாபார பிரதேசத்தில் மேலும் ஒரு நபர் 10 கிராம் 760 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.