பொது செயலாளர் பதவியில் இருந்து விலகினார் ஆறுமுகன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் பதவியலிருந்து ஆறுமுகன் தொண்டாமல் விலகியுள்ளார்.

இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபையின் ஒன்றுகூடல் இன்று காலை ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொழும்பில் உள்ள இ.தொ.கா தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களினால் இந்த நிர்வாகம் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தவகையில் இதுவரை காலமும் காங்கிரஸின் பொது செயலாளர் மற்றும் தலைவராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான், இன்றிலிருந்து தலைவராக மட்டும் செயற்படவுள்ளார்.

அத்தோடு, பொது செயலாளராக அனுஷியா சிவராஜாவும், பிரதி பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் மற்றும் உப தலைவராக பதுளை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.