கிளிநொச்சியை உலுக்கியுள்ள கொலை தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சிகர புகைப்படங்கள்

நேற்றைய தினம் கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி பகுதியை சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் இருந்ததால் எமது பிராந்திய செய்தியாளரும், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் இவர் பாதுகாப்பு உத்தியோகத்தராக இருக்கலாம் என சந்தேகம் கொண்டுள்ளனர்

பின்னார் கிளிநொச்சியில் உள்ள அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களை மேற்பார்வை செய்யும் நிறுவனங்களுக்கு சென்று பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் யாரும் நேற்று வருகை தரவில்லையா என வினவியுள்ளனர்.

இதன்போது அறிவியல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு உத்தியோகத்தர் வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை உத்தியோகத்தர்களுடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்ததன் பின்னர் குடும்பத்தாரை வைத்திய சாலைக்கு அழைத்து சென்று சடலம் அவர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இளம் பெண்ணின் கொலை தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் தீவிரப் படுத்தப் பட்டுள்ளதுடன் கொலை இடம் பெற்ற இடம் மற்றும் அதன் சூழல் தொடர்பில் பல புகைப்படங்களை வெளியிட்டு அதனடிப்படையில் பொலிசாரின் விசாரணை தீவிரப் படுத்தப் பட்டுள்து.

சம்பவம் தொடர்பில் குறித்த ஊடகவியலாளரினால் கிளிநொச்சி பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.