கலஹா மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

கலஹா மருத்துவமனையை தற்காலிகமாக மூட, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து, ஆத்திரமடைந்த தெல்தோட்டை பகுதி மக்கள், மருத்துவமனை உபகரணங்களுக்கு பாரிய சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து, நேற்று முதல் மருத்துவமனையில் எவ்வித பணியும் இடம்பெறவில்லை எனத், தெரிவிக்கப்படுகிறது.

கலஹா மருத்துவமனையில் பணியாற்றிய இரண்டு மருத்துவர்கள், மாகாண சுகாதார காரியாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.