திருகோணமலையில் ஏற்பட்ட கோர விபத்து! ஒருவர்பலி...முவர் பரிதாபநிலையில்...

திருகோணமலை, கந்தளாய் பிரதான வீதியில் கப்பல்துறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்து பரிதாபநிலையில் உள்ளனர்.மோட்டார் சைக்கிளொன்றும், கார் ஒன்றும் மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த தமிழ் இளைஞரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தம்பலகாமம் 98ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த, 24 வயதுடைய ராமச்சந்திரன் சிறிகாந்த் என்னும் இளைஞனே விபத்தின் போது உயிரிழந்துள்ளதுடன், அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய எஸ்.திவாகர் என்னும் இளைஞரே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காரில் பயணித்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த கந்தளாய், லைட் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய என்.ஏ.எஸ்.மதுசங்க மற்றும் அவரது நண்பர் ஒருவரும் இந்த விபத்தின்போது படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.