இந்திய பிரதமரை சந்தித்த ஜனாதிபதி

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

4வது பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இன்று ஆரம்பமானது..