யாழ் பொலிஸாரின் செயல்! கடும் கோபத்தில் மக்கள்

யாழ்ப்பாண பொலிஸாரின் அசமந்தப் போக்கு காரணமாக மக்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும்.

எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால், குற்றவாளிகள் மூவரிடமும் தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் யாழ். நீதிமன்றம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாண பொலிஸாரின் அசமந்தப் போக்கினால் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மக்கள் தமது கடுமையான விசனங்களை தெரிவித்து வருகின்றனர்.